நெருப்பின் மீது நிற்கும் போராட்டம்
மு. சிவலிங்கம்“ரொம்ப சீக்கிரமா ஹார்ட் அட்டாக் வந்து நான் செத்துப் போயிருவேன்னு தோணுது சார்... ”
இப்படிச் சொன்னவர் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர். மாணவர்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுவரும் அரிதான ஒரு தலைமை ஆசிரியர் இவர். தென் சென்னைப் பகுதியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இவர் பணியாற்றிவருகிறார். பள்ளிக்கூட மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தனது பள்ளிக்கூட ஆசிரியர்களின் அலட்சிய மனோபாவம் குறித்து, மனம் வெதும்பி அவர் இப்படிச் சொன்னார்.
மாணவர்களை நெறிப்படுத்தும் நடவடிக்கையில், தன்னையே பலி கொடுத்துவிட்டார் ஒரு ஆசிரியை! இந்த உயிர்ப் பலிக்குப் பிறகுதான் மாணவர்களுக்கு நன்னெறி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றித் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
அரசு மற்றும் மாநகராட்சிக் கல்வித் துறையின் அதிகாரிகள் அனைவரும் மாணவ, மாணவியரின் மதிப்பெண், பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறித்து மட்டுமே ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் விவாதிக்கிறார்கள். உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள்.
திரும்பிய பக்கமெல்லாம் டாஸ்மாக் கடைகள், பாலியல் வெறியைக் கிளறிவிடும் ஊடகங்கள், விரசத்தை வாரி இறைக்கும் சினிமா சுவரொட்டிகள், ஏழைக் குடும்பங்களில் குடி போதையில் அம்மாவைக் கீழ்த்தரமாக, இழிவாகப் பேசி, உதைத்துக் கொடுமைப் படுத்தும் அப்பா, வசதியான குடும்பங்களில், செல்ல வாரிசுக்கு, 50 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து நம்பர் ஒன் மருத்துவ கல்லூரியில் சீட் ‘வாங்க’ பணம் வேண்டும் என்பதற்காக அதிக வருவாய் ஈட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கும் பெற்றோர்கள் என நெருக்கடியான சூழலில் இன்றைய விடலைப் பருவ மாணவ, மாணவியர் சிக்கித் தவிக்கின்றனர். இது பரிதாபமான நிலை மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான நிலவரமும்கூட என்பதை நானும் நீங்களும் உள்ள டங்கிய சமூகம் மறந்துவிட்டதன் விளைவுதான், சென்னை ஆசிரியை காவு வாங்கப்பட்ட அவலம்!
தன் கடமையைச் செம்மையாக ஆற்றும் முனைப்புடன் பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்கள் ஒவ்வொரு நொடியிலும் நெருப்பின் மீது நின்று கொண்டிருப்பதைப் போன்ற ஆபத்தான நிலையில் உள்ளனர். சில உதாரணங்களைப் பாருங்கள்:
வடபழனி அருகே உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் வகுப்பின் ஒரு பிரிவு மாணவ, மாணவியர் அந்த வகுப்பறையின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு, சினிமாப் பாடல்களை உரத்த சத்தத்துடன் பாடிக் கூச்சல் போட்டனர். அங்கு சென்ற தலைமையாசிரியர் அவர்களை கண்டித்துவிட்டு, பாடம் நடத்தத் தொடங்கினார். பெரும்பாலானோர் பாடத்தை கவனிக்கத் தயாராக இல்லை, கூச்சலையும் கைவிடவில்லை. பொறுமை இழந்த தலைமையாசிரியர், “கதவை மூடிவிட்டு என்ன செய்தீர்கள்? ஆடைகளை களைந்துவிட்டு நடனமாடினீர்களா?” என்ற பொருளில் கொச்சையாகக் கேட்டுவிட்டார். சற்று நேரத்தில், சில பெற்றோர்களும் அதே பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலரும் கும்பலாகச் சென்று, தலைமை ஆசிரியரை கண்டித்தார்கள். குறிப்பிட்ட வகுப்பறையில் என்ன நடந்தது என்பது குறித்து, தலைமை ஆசிரியர் விளக்கமளிக்க முயன்றபோது, ஆசிரியர்களின் கண்ணெதிரிலேயே அந்தக் கும்பலில் சிலர், அவரை அடித்தனர். தலைமை ஆசிரியர் மன்னிப்புக் கேட்ட பிறகே அவர்கள் அகன்றார்கள்.
அதே பள்ளியில் ஒரு நாள், மாடிப் படிக்கட்டில் ஒரு மாணவனும் மாணவியும் மிக நெருக்கமாக அமர்ந்துகொண்டு ரசாபாசமாக நடந்துகொண் டார்கள். அந்தப் பக்கம் சென்ற ஒரு ஆசிரியை அவர்கள் இருவரையும் கண்டித்தார். அடுத்த நாள் நான்கைந்து இளைஞர்கள் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்து அந்த ஆசிரியையைத் திட்ட ஆரம்பித்தார்கள். மிரட்டினார்கள். பீதியை வெளியே காட்டிக்கொள்ளாமல், தனது கணவரை மொபைலில் தொடர்புகொண்ட அவர், “போலீஸ கூட்டிட்டு உடனே எங்க ஸ்கூலுக்கு வாங்க” என்று சொன்னதும் அந்தக் கும்பல் இடத்தைக் காலி செய்தது.
தென் சென்னைப் பகுதியில் உள்ள மற்றொரு சென்னை உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாணவன் ரவுடித்தனமாக நடந்துக்கொள்வான். ஒவ்வொரு மாணவியையும் மிரட்டி, அவனுக்குப் பிடித்த உணவு அயிட்டத்தை சமைத்துக்கொண்டு வரும்படி உத்தரவிடுவான். மிரட்டலுக்கு பயந்து மாணவிகள் அவன் கட்டளைளையை நிறைவேற்றுவார்கள். ஒரு மாணவி கொண்டு வந்த பிரியாணியை ருசித்து முடித்ததும், அருவருப்பான அவனது மற்றொரு விருப்பத்தை வெளியிட்டு அந்த டிபன்பாக்ஸில் கடிதம் எழுதிவைத்தான்.
ஒரு ஆசிரியர் அந்த மாணவனைக் கண்டித்தார். அவன் வேறொருவர் மொபைலில் இருந்து அந்த ஆசிரியரிடமும் அவரது மனைவியிடமும் கீழ்த்தரமாக, ஆபாசமாகப் பேசி மிரட்டினான். தலைமையாசிரியரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவனைக் கூப்பிட்டு மிக அன்புடன் விசாரித்தார். நான் அப்படிப் பேசவே இல்லை என்று சாதித்தான். தலைமை ஆசிரியர் அந்த சமாதானத்தை ஏற்றுக்கொண்டார். பிரச்சினை அதோடு முடிந்தது.
இப்படிப்பட்ட அவலங்கள் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் செயல்படும் பெரும் பாலான பள்ளிகளின் யதார்த்தம். ஆசிரியர்கள் கையில்தான் இதற்கான தீர்வு உள்ளது. அடிப்படையான ஒழுங்கு, கட்டுப்பாடு நெறிகளை மாணவச் செல்வங்களின் மனதில் ஆழமாக வேரூன்றச் செய்ய வேண்டும். இத்தகைய முனைப்புடன் செயலாற்றும் ஆசிரியர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் பொறுப்பை நிர்வாகம் ஏற்க வேண்டும். அதே சமயம் ஆசிரியர்களின் ஒவ்வொரு செயலும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.
ஆசிரியர்களின் முன்னுதாரணமான நடத்தை, மாணவர்களை நெறிப்படுத்தி அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களின் முனைப்பு, கடமையை ஆற்றும் ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு ஆகிய மூன்றும் இருந்தால் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தைக் கணிசமாக உயர்த்தலாம்.
மு.சிவலிங்கம், ஊடகவியலாளர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர். மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி, வாழ்வியல் திறமைகளை மேம்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.
“ரொம்ப சீக்கிரமா ஹார்ட் அட்டாக் வந்து நான் செத்துப் போயிருவேன்னு தோணுது சார்... ”