Thursday, September 2, 2010

கருகித் துடிக்குதே பூமி

  ஞாயிற்றுக் கிழமை விடுமுறையைக் கொண்டாட்டத்துடன் அனுபவித்து மகிழ, முந்தைய நாள் மாலைப் பொழுதிலேயே சென்னை மாநகரம் உற்சாத்துடன் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது!  இரண்டாம் வகுப்பிலிருந்து கல்லுரியில் பயிலும் மாணவியர் வரையிலான நுற்றுக்கும் மேற்பட்டோர் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர்.



  உலகுக்கே பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ஓர் ஆபத்தான பிரச்சினையிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும், அவற்றில் ஒவ்வொரு மனிதனின் பங்களிப்பு குறித்தும் உணர்த்துவதற்காக சமுக அக்கறையுடன் அவர்கள் அங்கு ஒன்றுதிரண்டிருந்தனர்
  இயற்கை வளங்களைப் பாழ்படுத்தி, நிலத்தை, நீரை, காற்றை மாசுபடுத்தி, வருங்கால சந்ததியினருக்கு பெரும் துரோகமிழைத்து வரும் மனித இனத்தைத் தண்டிக்க ஆக்ரோஷத்துடன்  இயற்கை  தயாராகிவிட்டதையும், பூமி வெப்பமடைதல் என்ற கடும் தாக்குதலை அது ஆரம்பித்துள்ளதையும் இந்த மாணவியர் கலைநிகழ்ச்சிகள் வாயிலாக கவலையுடன் விவரித்தனர்.
  கிளி வேடம் தரித்துவந்த ஒரு மாணவி எங்கும் பரவிவரும் நச்சுக்காற்றால் பறவை இனம் அழிந்துகொண்டிருப்பதை சோகத்துடன் சுட்டிக்காட்டி, பார்வையாளர்களை ஆழமாக சிந்திக்கவைத்தார்.' எங்கள் இனம் அழிக்கப்படுவதை நீங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் உங்கள் இனம் (மனித இனம்) அழிக்கப்பட்டுவிடும' என எச்சரிக்கை விடுத்தார்.

  இயற்கை ஏ.சிக்களான மரங்களை வெட்டிவிட்டு, செயற்கை ஏ.சி. வசதிகளை பெருக்கிக்கொண்டு, காற்று மண்டலத்தை மாசு படுத்துவதாலும், வாகனப்புகை மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப்புகையாலும், ஓசோன் படலத்தில் ஓட்டைகள் விழுந்து, சூரியனின் புற ஊதாக்கதிர்கள் தாக்குவதால் ஏற்படும் அபாயங்களைப் பார்வையாளர்கள் மனதில் ஆழமாகப் பதியும்படி  இந்த மாணவிகள் விவரித்தனர்.
  இவர்கள் தயாரித்திருந்த, பூமி வெப்பமடைதல் பேராபத்தை விளக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளில் ஒன்றில் இடம்பெற்றிருந்த, கரியமிலவாயு போர்வைக்குள்ளே கருகித் துடிக்குதே பூமி  என்ற வாசகத்தைப் படித்த யாரும்  பூமித்தாயின் மவுனமான கதறலை அன்று உணர்ந்திருப்பார்கள். இந்தக் கதறல் வேறு யார் காதுகளில் விழுந்ததோ.. விழவில்லையோ... தெரியாது. ஆனால் அந்த மாலைப் பொழுதில் அங்கு கூடியிருந்த மாணவிகளின் உள்ளங்களை பூமித்தாயின் அந்த மவுனக் கதறல் உலுக்கிவிட்டதை, சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்… பூமியைக் காப்போம்… என அந்த மாணவச் செல்வங்கள் அன்று எடுத்துக்கொண்ட உறுதிமொழி  அழுத்தமாக உணர்த்தியது.


  சென்னையில் செயல்பட்டவரும் தன்னார்வ அமைப்பான வாத்ஸல்யம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து முதல்முறையாக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்த பல ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.

பிளாஸ்டிக் பொருள்கள் எப்படிப்பட்ட பேராபத்துகளை உணடாக்குகின்றன என்பதை பின்வரும் இணைப்பில் காணுங்கள்…
  


பூமியைக் காப்பதில் நமது பங்களிப்பு என்ன?
யோசிப்போம்…மாற்றங்கள் மலர வேண்டிய இடம், நம் உள்ளங்கள்தான்…

Saturday, August 14, 2010

கற்றபின் நின்றேன் அதற்குத் தக,,

இந்தியா 2020 தொலைநோக்குத் திட்டம் தந்து,  நாட்டுக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் பற்றி சென்னை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்  மாணவ மாணவரிடையே ஒரு நாள் உரையாற்றினேன்.


புவி வெப்பமடைதல் பற்றிக் குறிப்பிட்டபோது  பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறித்தினேன். காலைச் சிற்றுண்டிக்காக அரைத்த மாவு வாங்கச் செல்லும் போது, கையோடு ஒரு பிளாஸ்டிக் பையை நான் எடுத்துச் செல்வதால் தினமும் ஒரு பிளாஸ்டிக் பையை நான் தவிர்ப்பதை பெருமிதத்துடன் சொன்னேன்.
சட்டென்று ஒரு மாணவி எழுந்தார். "வீட்டிலிருந்து ஒரு பாத்திரம் எடுத்துச் சென்றால் இரண்டு பைகளைத்  தவிர்க்கலாமே " என்றார்.


அந்த ஆசான் சொன்னதை வேத வாக்காக ஏற்றேன். அடுத்த நாளில் இருந்து  மாவு வாங்க பாத்திரத்தோடு செல்கிறேன்.  நான் மட்டுமல்ல, என் மகளும் மகனும், எம்.ஜி.ஆர் நகர் மாணவி கற்றுக் கொடுத்த பாடத்தை வழுவாது பின்பற்றி வருகிறோம். பள்ளிக்கூட மாணவ மாணவியர்மீது அப்துல் கலாம் வைத்துள்ள ஆழமான நம்பிக்கை எவ்வளவு உண்மை என்பதைப் புரிந்துகொண்டேன்.


எந்த விஷயமாக இருந்தாலும் மாற்றம் மலர வேண்டிய இடம் நம் ஒவ்வொருவரின் உள்ளம்தான். மாறட்டும் மனோபாவம்.. மலரட்டும் நல்வாழ்வு...


விழிவேள்வி வெளியீட்டு விழா காட்சிகள்... 

கண் மருத்துவத் துறையில் உலகிற்கே வழிகாட்டி,பார்வை இழப்பால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் புதிய விடியலை மலர வைக்கும் அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் வெங்கடசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு  விழிவேள்வி நூலை டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் மதுரையில் 2010 மே 20ஆம் நாள் வெளியிட்டார். அந்த விழாக் காட்சிகள் உங்கள் பார்வைக்காக...


 


வரவேற்புரை :  அரவிந்த் துணைத்  தலைவர் டாக்டர் நாச்சியார்

அப்துல் கலாமிடம் ஆசி பெறும் நூலாசிரியர் 
விழிவேள்வியை   அப்துல் கலாம் வெளியிட டாக்டர் எம்,ஜி,ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் பெற்றுக்கொள்கிறார்.
”விழிவேள்வி படித்தேன்...என்னை மறந்தேன்...
”ஆஹா என்ன அருமையான புத்தகம்..”
சிறப்புரை: அப்துல் கலாம்,  அருகில் ஜி.நல்லகிருஷ்ணன், மயில்வாகனன், அரவிந்த் தலைவர் நம்பெருமாள்சாமி, ஜி.கிருஷ்ணன் மற்றும் மு.சிவலிங்கம்
நூல் அறிமுக உரை - மு . சிவலிங்கம்
நன்றி உரை : அரவிந்த் நிதித்  துறை இயக்குனர் ஜி . ஸ்ரீனிவாசன்
அப்துல் கலாமிடம்  கையெழுத்து  வேட்டை
                                                  
---------------------------------------------------------------------------------------------------------------
 பிரதிகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலை/அலைபேசி எண்கள்: 
சென்னை- 044 4263 4283/84  மதுரை - 90030 16718    திருநெல்வேலி:  97910 34167    திருச்சி : 97899 77824
கோவை: 97899 77845 சேலம் :  97910 32867 
-------------------------------------------------------------------------------------------------------------
டாடக்டர் வெங்கடசாமியின் வாழ்க்கைப் பயணம் பற்றிய விழிவேள்வி படித்தேன்... என்னை மறந்தேன்.. என்ன ஓர் அற்புதமான புத்தகம்! இவரின் வாழ்க்கை வரலாறு, இன்றைய இளைஞர்களை மாற்றும் ஒரு கிரியா ஊக்கியாக செயல்படும் என்பது திண்ணம். இந்த விழிவேள்வி நூல் நாட்டுக்கு ஒரு பெரும் பொக்கிஷம்!           

 டாக்டர் ஆ.பஜெ. அப்துல்கலாமின்
அணிந்துரையிலிருந்து

தமிழ் மண்ணில் தோன்றிய இந்தத் தன்னலமற்ற சூரியன் (டாக்டர் வெங்கடசாமி) தந்த ஒளிக்கதிரை உள்வாங்கி, ஊருக்கு ஒரு மருத்துவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் போதும். இந்த நாட்டின் ஒவ்வொரு கைப்பிடி மண்ணிலும் இறைவனின் தரிசனம் நிச்சயம்! 

டாக்டர் வெங்கடசாமியின் மறைவையொட்டி 
ஆனந்தவிகடன் வெளியிட்ட தலையங்கத்திலிருந்து...


மதுரை, தேனி, திருநெல்வேலி, கோவை, பாண்டிச்சேரி ஆகிய நகரங்களில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைகளிலும் விழிவேள்வி பிரதிகள் விற்பனைக்கு உள்ளன.