புவி வெப்பமடைதல் பற்றிக் குறிப்பிட்டபோது பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறித்தினேன். காலைச் சிற்றுண்டிக்காக அரைத்த மாவு வாங்கச் செல்லும் போது, கையோடு ஒரு பிளாஸ்டிக் பையை நான் எடுத்துச் செல்வதால் தினமும் ஒரு பிளாஸ்டிக் பையை நான் தவிர்ப்பதை பெருமிதத்துடன் சொன்னேன்.
சட்டென்று ஒரு மாணவி எழுந்தார். "வீட்டிலிருந்து ஒரு பாத்திரம் எடுத்துச் சென்றால் இரண்டு பைகளைத் தவிர்க்கலாமே " என்றார்.
அந்த ஆசான் சொன்னதை வேத வாக்காக ஏற்றேன். அடுத்த நாளில் இருந்து மாவு வாங்க பாத்திரத்தோடு செல்கிறேன். நான் மட்டுமல்ல, என் மகளும் மகனும், எம்.ஜி.ஆர் நகர் மாணவி கற்றுக் கொடுத்த பாடத்தை வழுவாது பின்பற்றி வருகிறோம். பள்ளிக்கூட மாணவ மாணவியர்மீது அப்துல் கலாம் வைத்துள்ள ஆழமான நம்பிக்கை எவ்வளவு உண்மை என்பதைப் புரிந்துகொண்டேன்.
எந்த விஷயமாக இருந்தாலும் மாற்றம் மலர வேண்டிய இடம் நம் ஒவ்வொருவரின் உள்ளம்தான். மாறட்டும் மனோபாவம்.. மலரட்டும் நல்வாழ்வு...
விழிவேள்வி வெளியீட்டு விழா காட்சிகள்...
கண் மருத்துவத் துறையில் உலகிற்கே வழிகாட்டி,பார்வை இழப்பால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் புதிய விடியலை மலர வைக்கும் அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் வெங்கடசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு விழிவேள்வி நூலை டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் மதுரையில் 2010 மே 20ஆம் நாள் வெளியிட்டார். அந்த விழாக் காட்சிகள் உங்கள் பார்வைக்காக...
| வரவேற்புரை : அரவிந்த் துணைத் தலைவர் டாக்டர் நாச்சியார் |
| அப்துல் கலாமிடம் ஆசி பெறும் நூலாசிரியர் |
| விழிவேள்வியை அப்துல் கலாம் வெளியிட டாக்டர் எம்,ஜி,ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் பெற்றுக்கொள்கிறார். |
| ”விழிவேள்வி படித்தேன்...என்னை மறந்தேன்...” |
| ”ஆஹா என்ன அருமையான புத்தகம்..” |
சிறப்புரை: அப்துல் கலாம், அருகில் ஜி.நல்லகிருஷ்ணன், மயில்வாகனன், அரவிந்த் தலைவர் நம்பெருமாள்சாமி, ஜி.கிருஷ்ணன் மற்றும் மு.சிவலிங்கம்
| நூல் அறிமுக உரை - மு . சிவலிங்கம் |
| நன்றி உரை : அரவிந்த் நிதித் துறை இயக்குனர் ஜி . ஸ்ரீனிவாசன் |
| அப்துல் கலாமிடம் கையெழுத்து வேட்டை |
---------------------------------------------------------------------------------------------------------------
பிரதிகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலை/அலைபேசி எண்கள்: சென்னை- 044 4263 4283/84 மதுரை - 90030 16718 திருநெல்வேலி: 97910 34167 திருச்சி : 97899 77824
கோவை: 97899 77845 சேலம் : 97910 32867
-------------------------------------------------------------------------------------------------------------
டாடக்டர் வெங்கடசாமியின் வாழ்க்கைப் பயணம் பற்றிய விழிவேள்வி படித்தேன்... என்னை மறந்தேன்.. என்ன ஓர் அற்புதமான புத்தகம்! இவரின் வாழ்க்கை வரலாறு, இன்றைய இளைஞர்களை மாற்றும் ஒரு கிரியா ஊக்கியாக செயல்படும் என்பது திண்ணம். இந்த விழிவேள்வி நூல் நாட்டுக்கு ஒரு பெரும் பொக்கிஷம்!
டாக்டர் ஆ.பஜெ. அப்துல்கலாமின்
அணிந்துரையிலிருந்து
அணிந்துரையிலிருந்து
தமிழ் மண்ணில் தோன்றிய இந்தத் தன்னலமற்ற சூரியன் (டாக்டர் வெங்கடசாமி) தந்த ஒளிக்கதிரை உள்வாங்கி, ஊருக்கு ஒரு மருத்துவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் போதும். இந்த நாட்டின் ஒவ்வொரு கைப்பிடி மண்ணிலும் இறைவனின் தரிசனம் நிச்சயம்!
டாக்டர் வெங்கடசாமியின் மறைவையொட்டி
ஆனந்தவிகடன் வெளியிட்ட தலையங்கத்திலிருந்து...
மதுரை, தேனி, திருநெல்வேலி, கோவை, பாண்டிச்சேரி ஆகிய நகரங்களில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைகளிலும் விழிவேள்வி பிரதிகள் விற்பனைக்கு உள்ளன.
